ஒருவர் நல்ல நிலையில் வாழ்ந்துவந்தால்அவர் நல்ல லக்னத்தில் பிறந்திருக்கிறார்என்று சொல்வார்கள். லக்னம் என்பது உயிர். ஒன்பது கிரகங்களும் உடல். ஒருவர் ரிஷபம்அல்லது மகர லக்னத்தில் பிறந்தால் கோடீஸ் வரராகும் யோகமுண்டு. நாம் எந்த லக்னத்தில்பிறந்திருக்கிறோமோ, அதன்படிதான் ஆயுளும் நீடிக்கும். அதற்கு முன்னர் நாம்கவனிக்கவேண்டிய விஷயம் - அம்சத்தில்லக்னம் மாறியிருக்க வாய்ப்புள்ளது. இனி ஒவ்வொரு லக்னப்படி அவரவர்அடையும் பொதுப்பலனைப் பார்ப்போம்.
மேஷம்
ராஜ வெகுமானம் உண்டு. வெகுஜனப் பிரியர். தைரியமானவர். அடிமைத் தொழில் புரிபவர். மூர்க்கர். சாமர்த்தியசாலி. மெலிந்த உடல். அடக்கமுடையவர். தனவான்.பொறுமையானவர் அறிவாளி.அழகானவர். தன் பயம் உள்ளவர். இவருக்கு வரும் மனைவி உபயோ கமுள்ள களத்திரமாய் இருப்பார்.ஆயுதம், நெருப்பு, மரம், கல்ஆகியவற்றில் வீரமுள்ளசரீரம். சகோதரருக்கு உதவுபவர். அற்ப புத்திரரைஉடையவர். 4, 5, 7, 10, 20, 22, 25, 28ஆகிய வயதுகளில் அக்னி, ஜுரம், நீர், சிரங்கு,வைசூரி, விஷத்தால் பீடை உடையவர்கள்.லக்னத்தை சுபர் பார்க்க 75 வயதுவரை வாழ்வார். இந்த லக்னத்திற்கு சூரியன், வியாழன் சுபர்கள். சனி சம்பந்தப்பட்ட வியாழன் அவருக்கேற்ற பாவப்பலனைக் கொடுப்பார். வியாழன், சூரியன் யோகக் காரர்கள். இவர்கள் ஒரே ராசியில் இருந்தால் பிரபலயோகக்காரர்கள். புதன், சுக்கிரன், சனி பாவிகள். சனி, புதன் கொல்ல மாட்டார்கள். மேஷ லக்னத்தைப் பொருத்தவரை தனியாக இருக்கும் சனி கொல்வார். மாரக ஸ்தான மாகிய 2, 3, 7, 8, 12-ல் இருந்தால் மாரகத்துக்கு ஒப்பான கண்டம் நிகழும்.
ரிஷபம்
களத்திர தோஷம் உண்டு. சத்தியவான். சுபகாரியக்காரன்.பிறர் சொத்தை தன்வசப்படுத்துவார். பிறரைக் கவர்வார். ஆடை, ஆபரணம் உள்ளவர். குண தோஷம் அறிந்தவர். அடிமைத்தொழில் புரிபவர். பிற்கால புத்திரரை உடையவர். 5, 13, 16, 19, 20, 27 ஆகிய வயதுகளில் ஜுரம், கழுத்தில்
வியாதி, ஷயம், சிரங்கு ஆகியவற் றால் பீடை ஏற்படும். இந்த லக்னத்தை சுபகிரகம் பார்த்தால் 77 வயதுவரை வாழ்வார்கள். சூரியனும் சனியும் நல்லவர்கள். சனியொருவரே மேலான ராஜயோகத்தைக் கொடுப்பார். சந்திரன், வியாழன், சுக்கிரன் பகை. சந்திரன், வியாழன், செவ்வாய் மாரகாதிபதிகள். புதன் கொல்ல மாட்டார். மாரக ஸ்தானமாகிய 2, 3, 7, 8, 12-ல் இருந்தால் மாரகத்திற்குஒப்பான கண்டத்தைக் கொடுப்பார்கள்.எனவே ஜோதிடர்கள் ரிஷப லக்னத் தைப் பற்றிக் கூறும்பொழுது சந்திரன், வியாழன், சுக்கிரன், செவ்வாயுடன் சம்பந் தப்பட்ட கிரகங்களை ஆராய்ந்து பலன்சொல்லவேண்டும்.
மிதுனம்
கைராசிக்காரர். ரத்தநோய் இருக்கும். இனிய வார்த்தை உடையவர். கபடமான வர். களத்திரத்தின் சொல்லைக் கேட்பவர். வெட்கமுடையவர். கணக்கர். புகழு டையவர். வழக்கறிபவர். 2, 3, 4, 5, 8, 9, 10, 18, 25, 28 வயதுகளில் நெருப்பு, ஆயுதம், ஜுரம், கண் நோய் ஆகியவற்றால் பீடை. இந்த லக்னத்தை சுபகிரகம் பார்க்க 85 வயதுவரை வாழ்வார். இந்த லக்னத் திற்கு சூரியன், செவ்வாய், வியாழன் கொடிய பாவிகள். வியாழன், சனியோடு சேர்வாராயின், மேஷ ராசியில் பிறந் தோருக்கேற்ப அவயோகக்காரராக மாறுவார். இந்த லக்னருக்கு சுக்கிரன் மட்டுமே நட்பு. சூரியன், செவ்வாய்,வியாழன் மாரகஸ்தானங்களில் மாரகத் திற்குச் சமமான கண்டத்தைக் கொடுப் பார்கள். குருவும் சனியும் தர்மகர்மாதிபதி. ஆகையால் யோகக்காரர்களாக மாறு வார்கள்.
கடகம்
தனவான். கபடமுள்ள- அவமானப்படுத்தக்கூடிய களத்திரமுடையவர். சாமர்த்தியசாலி. குரு விசுவாசி. அற்ப புத்திரர்களை உடை யவர். விலைமாதர் விருப்பம் உடையவர். வெகுகாமி. துக்கமுடையவர். தந்தைக்கு அடங்காதவர். 5, 8, 14, 16, 20, 25, 40 வயதுகளில் ஜுரத்தால், பேதியால் பீடை. லக்னத்தை சுபகிரகம் பார்க்க 90 வயதுவரை வாழ்வார். வியாழன், செவ்வாய் நட்பு. செவ்வாய் ஒருவரே யோகம் தருவார். செவ்வாயும் வியாழனும் கூடியிருந்தால் பிரபல யோகத்தைத் தரும். புதன், சுக்கிரன், சனி மாரகர்கள். இவர்கள் மாரக ஸ்தான மாகிய 2, 3, 7, 8, 12-ல் இருந்தால் மாரகத்திற்கு ஈடான கண்டத்தைக் கொடுப்பார்கள்.
சிம்மம்
கம்பீரமானவர். நல்ல புசிப்புடையவர். திடவான். இருதாரம் உடையவர். பாவம் செய்ய அஞ்சுவார். தாய்# தந்தையிடம் விரோதம்இருக்கும். கோபி. தைரியமானவர். பக்திமான். சகலகலா வல்லவர். ஜனவசியர். வேலை உடையவர். 5, 10, 27, 30 வயதுகளில் ஜுரத் தால் பீடை. இந்த லக்னத்தை சுபகிரகம் பார்க்க 80 வயதுவரை வாழ்வார். செவ்வாயும் சுக்கிரனும் தீயபலனைக் கொடுப்பார்கள். சனி, சுக்கிரன் மாரகர்கள். மாரகஸ்தான மாகிய 2, 3, 7, 8, 12-ல் இருந்தால் மாரகத்திற்கு ஒப்பான கண்டம் நிகழும்.
கன்னி
தர்மவான். மனைவிக்கு பயந்தவர். நல்ல நடத்தை உடையவர். கைராசிக்காரர். பிற ரால் தொழில், தனம் பெறுபவர். ஜனப் பிரியன். பின்வயதில் அதிக தனச்சேர்க்கை உடையவர். 5, 8, 10, 18, 19 வயதுகளில் நெருப்பு, பேதி, ஜுரம், வைசூரி ஆகியவற்றால் பீடை.சுபகிரகப் பார்வை உண்டாகில் 77 வயதுக்குக் குறையாம- ருப்பார். இந்த லக்னத்திற்கு சுக்கிரன், சனி சுபர்கள். சந்திரன், செவ்வாய், வியாழன் பாவிகள். புதனும் சுக்கிரனும் யோகக்காரர்கள். இவர்களிருவரும் கூடியிருந்தால் பிரபல யோகம். சந்திரன், செவ்வாய், வியாழன் மாரகர்கள். இவர்கள் 2, 3, 7, 8, 12-ல் இருந்தால் மாரகத்துக்குச் சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.
(மற்ற லக்னங்கள் அடுத்த இதழில்)
செல்: 94871 68174